காஸா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 16 பேர் பலி
காஸா பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஸாமுனையின் மத்திய பகுதியில் உள்ள பாடசாலையின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
அந்த பாடசாலையில் போரால் வீடுகளை இழந்த மக்கள் முகாமிட்டு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததாக பலஸ்தீன வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
