காவல்நிலையத்தில் வெடி விபத்து
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீா், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 கிலோ வெடிபொருள்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக அரியானா மாநிலம் ஃபரீதாபாதில் இருந்து மட்டும் 360 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, காவல்துறையினர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் காவல் நிலையத்திலிருந்த 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன், 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
