உணவு ஒவ்வாமை: ஆடைத்தொழிற்சாலை ஊழிர்கள் 50 பேர் வைத்தியசாலையில்
நீர்கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை 50 ஊழியர்கள் சுகவீனமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 50 ஊழியர்களே காலை உணவு உண்ட பின்னர் மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார், நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார், சீதுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்