
காலி முகத்திடல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 159 பேர் கைது
காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை சம்பவங்கள், நாடளாவிய ரீதியில் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, நபர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குறித்த 159 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
