காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

காலி கடற்பரப்பில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

காலி கடற்கரையில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் கப்பலில் இருந்து பேரிடர் எச்சரிக்கை வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது

குறித்த கப்பலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

கடலில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும், கப்பலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முப்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.