காலியில் 3 சீன பிரஜைகள் கைது
காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொபே வீதி, கிந்தோட்ட பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை மாலை 3 சீன பிரஜைகளை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகத்தின் அடிப்படையில் இக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 05 கையடக்கத் தொலைபேசிகள், உரிமையாளர் இல்லாத வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் 04 வங்கி அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
