காலியில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

காலி – ஹினிதும – மஹாபோதிவத்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.

ஹினிதும, அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேரே இதன்போது உயிர் இழந்துள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்