
காலிமுகத்திடல் போராட்டத்துக்கு இன்றுடன் ஒரு மாதம்
கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான இளைஞர் தன்னெழுச்சிப் போராட்டம் இரவு -பகல் பாராது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலின் இரு பகுதிகளிலும் கூடாரங்களை அமைத்து அதில் இரவு பொழுதை கழிப்பதுடன் அவர்களுக்கான உணவு உள்ளிட்ட உதவிகளை தன்னார்வ அமைப்புகள் வழங்கி வருகின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கொழும்பு காலிமுகத்திடல் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஒட்டுமொத்த அரசாங்கமும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.
