காலாவதியான ரின் மீன்கள் திகதி மாற்றி விற்பனை: அறுவர் கைது
காலாவதியான ரின் மீன்களின் திகதி மாற்றப்பட்டு விற்பனை செய்த சீன பிரஜை உட்பட 6 பேர் பேலியகொட பொலிஸாரால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யதுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 80 இலட்சம் ரூபா பெறுமதியான ரின் மீன்களை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்