காலாவதியான நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு
இந்தியாவில் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ் ( வயது 15 ) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரியமங்கலம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசாரணை மேற்கொண்ட போது, சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி உயிரிழப்புக்கு பின் விழித்துக்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் திருச்சியில் நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் நூடுல்ஸ் தயாரிக்கப்படும் பொருட்கள் தரச் சான்றிதழ் இடம் பெற்றுள்ளதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்