காலநிலை மாற்றம் மற்றும் உயிரினப் பல்வகைமை இழப்பால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள 331 மில்லியன் பவுண்ட்கள் நிதியுதவி வழங்க பிரித்தானியா உறுதியளித்துள்ளது. இந்த நிதி Global Environment Facility மூலம் உணவு மற்றும் நீர் பாதுகாப்பை மேம்படுத்தவும், அமேசான் மற்றும் காங்கோ உள்ளிட்ட முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரையொட்டி நியூயோர்க்கில் நடைபெற்ற காலநிலை தொடர்பான நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அழிவை தேசிய பாதுகாப்பு திட்டமிடலில் முக்கிய காரணிகளாகக் கருத வேண்டும் என உலக நாடுகளிடம் வலியுறுத்தினார்.
காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் உணவு மற்றும் நீர் பற்றாக்குறை, இடம்பெயர்வு, பொருளாதார பாதிப்புகள் மற்றும் வளங்களுக்கான போட்டி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி, சர்வதேச பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு மதிப்பீடு குறிப்பிடுகிறது.










