காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகளுக்கு பாதிப்பு!

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பெய்த கனமழை உடனான காற்றினால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக, வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம் பிரதேச பகுதியின் கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர், வடக்கு மற்றும் பாரதிபுரம் உட்பட பல இடங்களில் உள்ள வீடுகளின் கூரைகள் மற்றும் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கின்றனர்.