கார் மோதி விபத்து
காலி – மில்டன் குணவர்தன மாவத்தையில் உள்ள வீடொன்றில் நிறுத்த முற்பட்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே முதியவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் காலி பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
