கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி வைத்தியசாலைக்கு முன்னால் , கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிவெட்டி -பாரதிபுரத்தைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் படுகாயமடைந்து கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
