கார்த்திகை விளக்கீடு
💢வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் கார்த்திகை மாதமானது சிறப்பு மிக்கதொரு மாதமாக காணப்படுகின்றது எனலாம். ஏனெனில் இம்மாதத்தில் தான் கார்த்திகை விளக்கு வீடுகள் மற்றும் கோவில்கள் தோறும் ஏற்றி ஜக ஜோதியாய் காட்சியளிக்கும் வகையில் காணப்படுகின்றன. இவ்வாறாக கூறப்படுகின்ற இந்த கார்த்திகை தீபத்தின் மகிமை என்னவெனட்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். தெரியாதவர்கள் இந்தக் கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.
💢இந்து சமயத்தில் கூறப்படுகின்ற படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்களாக போரிட்டார்கள் அப்போது அங்கு வந்த சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகத் தோன்றனார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. யார் முதலில் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களே பெரியவர்கள் என போட்டி வைத்தார் சிவன்.
💢ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் உருவெடுத்து மேல்நோக்கிச் சென்றார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துழைத்துக் கொண்டு சென்றார் விஸ்ணு. பிரம்மாவின் வழியில் தாழம்பூ ஒன்றின் மடல் தென்பட்டது. பழரம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்திற்கு எப்படி வந்தது என்று பூவிடமே கேட்டார்.
💢தான் சிவன் தலையில் இருந்து விழுவாதாக அந்தப் பூ பொய் கூறியது. உடனே பிரம்மனன் பொய் நாடகம் போட முடிவு செய்தார். சிவன் முடியைத் தொட்டு இந்தத் தாழம்பூவை எடுத்து வருவதாக சிவனிடம் தான் பொய் கூறப் போவதாக, அதனை தாழம்பூ உண்மை என்று கூற வேண்டும் எனவும் கட்டளையிட்டார். தாழம்பூ அதற்கு உடன்பட்டது. சிவனிடம் சென்று இப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள்.
💢ருத்திர ரூபமாய் அக்கினிப் பிழம்பாய் இருந்த சிவன், இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் மேலும் கோபத்தால் சிவந்தார். தாழம்பூலுக்கும் பிரம்மனுக்கும் தண்டணையும் வழங்கினார் “தாழம்பூவை நான் இனி தரிக்கமாட்டேன்” என்று சபதம் இட்டார். பிரம்மனுக்கோ இனி இந்த பூமியில் கோவில்களும் இல்லை பூஜையும் இல்லை என்று கூறினார்.
💢உடனே மன்னிப்புக்கேட்டார் பிரம்மா. தாங்கள் இருவரும் கண்ட ஜகஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என சிவனிடம் விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இத்தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை தீப விளக்கு ஏற்றுவதன் தத்துவமாகும்.
💢இக்கார்த்திகைத் தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பது தான் ஆகும். அகல் விளக்கில் தீபம் ஏற்றும்போது, அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்திற்குத் தெரியும. அதையே மலை உச்சியிலோ, தரையில் சொக்கப்பனையாகவேதா ஏற்றினால் அதன் பிரகாசம் நீண்ட தூரத்திற்குத் தெரியும்.
💢கார்த்திகை தீபத்தன்று மலை வலம் வருதல் மிகவும் சிறப்பானது. கார்த்திகைத தீபம் ஏற்றுவதால் பாவவிமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். கர்ம வினைகளையும் போக்கும் என்பதும் பக்தர்களினுடைய நம்பிக்கை. இலங்கையிலும் சர்வாலய தீபம் , குமாராலய தீபம் , விஷ்ணுவாலய தீபம் என பல ஆலயங்களில் விஷேட வழிபாடுகள் அனுஷ்டிப்பது வழக்கமாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்