காரொன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து மாத குழந்தை பலி

வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், காரொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து மாத குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் கீர்த்தி பண்டாரபுர பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் இடம்பெற்ற இவ்விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஏழுவர் காயமடைந்து வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியிலிருந்து அதிகாரகமை ஊடாக பதுளை நோக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருடன் பயணித்த காரே விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்த வலப்பனை போக்குவரத்து பொலிஸார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.