காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

-யாழ் நிருபர்-

காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தலைமையில் இன்று புதன்கிழமை சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, கசூரினா கடற்கரை நுழைவுக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்களில் வரும் நபர்களுக்கான கட்டணம் நீக்கப்பட்டு, வாகனங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

அத்துடன், இரவு 9 மணிவரை கசூரினா கடற்கரை உல்லாசப் பயணிகளுக்காக திறந்திருக்கும்.

நீர்விநியோகம் நேர அட்டவணைப்படி நாளை முதல் நடைபெறும்.

இதன்படி J/47 திங்கள் J/46, J/48 செவ்வாய்  J/40  J/41 புதன்  J/45 வியாழன் J/44 வெள்ளி  J/42  J/43 சனி ஆகிய தினங்களில் மட்டுமே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும்.

விசேட தேவைகளுக்காக தண்ணீர் தேவைப்படுவோர் சபை அலுவலகத்தில் முன்கூட்டியே கட்டணம் செலுத்துவதன் மூலம் சேவைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும், என தீர்மானிக்கப்பட்டது.