காரைதீவு, நிந்தவூர், ஒலுவில் பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை

 

கல்முனை பிராந்தியத்தில் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் காரைதீவு, நிந்தவூர் மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள பழக்கடைகள்,ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

இதன்போது சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அத்துடன் பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தும் வேலைத்திட்டம் பிராந்திய பணிப்பாளர் உத்தரவிற்கமைவாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாத் தலைமையிலான அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.முனவ்வர், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.இஸ்ஸதீன், பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

உணவகங்களில் திடீர் சோதனை
உணவகங்களில் திடீர் சோதனை
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24