
காருடன் பேருந்து மோதியதில் யுவதி பலி
பண்டாரகம பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் காருடன் பேருந்து மோதியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த ஆடைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நுவாங்கி இந்துனில் (வயது – 23) என்ற யுவதியே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
