காரில் சென்ற பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து கொள்ளை முயற்சி

வத்தளையில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

‘X’ இல் பகிரப்பட்ட தகவலின்படி, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வத்தளை குடா-எடந்த வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரில் சென்ற பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் இருவர் பின்தொடர்ந்து சென்று காரை வழிமறித்துள்ளனர்.

ஒரு சந்தேக நபர் காரை உடைக்க முயற்சித்த போதிலும் காரில் இருந்த பெண் தப்பிச் சென்றுள்ளமை சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.