காரின் மீது ஏறிய கெப் வண்டி

அம்பாறை மூவாங்கலை வீதியில் கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹிகுரானையிலிருந்து அம்பாறை நோக்கி கெப் வண்டி சென்று கொண்டிருந்த போது கார் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கெப் வண்டியின் டயரில் காற்று இல்லாமல் போனதையடுத்து சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் கெப் வண்டி காரின் மேல் ஏறியுள்ளது.

இந்த சம்பவத்தில், கெப் வண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.