காய்ச்சலுக்கு இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் மரணம்: மக்களே எச்சரிக்கை

காய்ச்சல் நீடித்தாலோ அல்லது நோய்க்கான காரணத்தை பரிசோதிப்பதற்கு முன்போ, Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) நொன் ஸ்டெராய்டல் அன்டி இன்ஃபலமட்டரி ட்ரக் மருந்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குறித்த பணியகத்தின் பிரதிநிதி ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்கள் மற்றும் டெங்கு தொடர்பான மரணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக எச்சரித்தார்.

மேலும், NSAID வகை மருந்துகளை உட்கொண்டதால் டெங்கு தொடர்பான பல மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“டெங்கு நோய் கண்டறியப்பட்ட நோயாளி NSAID வகை மருந்துகளை பயன்படுத்தினால் அது அவருடைய உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்” என்று அவர் எச்சரித்தார்.

அத்துடன், பெரசிட்டமோலுக்குப் பதிலாக NSAID வகை மருந்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், காய்ச்சலுக்கான வலி நிவாரணிகளை பரிந்துரைக்கும் போது தங்கள் மருத்துவர்களிடம் இது தொடர்பில் விசாரிக்கவும் அந்த அதிகாரி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

Ibuprofen, Mefenamic acid, Indomethacin, Naproxen, Celecoxib மற்றும் Aspirin போன்ற பல வர்த்தக நாமங்களில் தயாரிக்கப்படும் NSAID வகை மருந்துகள் இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்