காயங்களுடன் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு

வெலிவேரிய சிவுரலுமுல்ல, நந்துங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் இரத்தக் காயங்களுடன் 68 வயதுடைய நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெலிவேரிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்