காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு : சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் கைது!

நெலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்பிட்டி பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, 32 வயது பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக, குறித்த பெண்ணின் 34 வயது கணவர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.