
காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுமிகள்
பாணந்துறை வாலான பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை மூன்று சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக காப்பக பொறுப்பாளர் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பேருவளை, பிபில மற்றும் ராகமை பிரதேசங்களைச் சேர்ந்த 13, 14 மற்றும் 16 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு தப்பி சென்றுள்ளனர்.
சிறுமிகளிடம் இருந்து நேற்று புதன் கிழமை நண்பகல் கைத்தொடலைபேசி ஒன்று சிறுமிகள் காப்பக பொறுப்பாளரால் கைப்பற்றப்பட்டதாகவும், அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் சிறுமிகள் கைத்தொலைபேசியை தரையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தப்பியோடிய சிறுமிகளை தேடும் பணியில் பாணந்துறை தெற்கு பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
