காத்தான்குடி மாணவி பிரதமரை சந்தித்தார்
காத்தான்குடியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி தனது பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரினி அமரசூரியவை இன்று திங்கட்கிழமை சந்தித்து எடுத்துரைத்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் தனது பகுதியில் காணப்படும் சமூகப் பிரச்சனை தொடர்பான செய்தியொன்றை கையளிப்பதற்காக பாத்திமா நதா காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கவும் என இளம் மாணவி கோரிக்கை விடுத்தார்.
07ஆம் திகதி பயணத்தை முன்னெடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த தரம் ஒன்பதில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி பாத்திமா நதா கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் கொழும்பை சென்றடைந்தார்.