காத்தான்குடியில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது

காத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை போதை பொருள் வியாபாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் கடந்த ஒருவார காலத்தில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்திய நடவடிக்கையின் கீழ் காத்தான்குடி பொலிஸார் போதை பொருள் வியாபாரிகளை தேடி கைது செய்துவருகின்ற நிலையில், கடந்த செவ்வாய்கிழமை தொடக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை வரை 5 வியாபாரிகளை 3 கிராம் தொடக்கம் 400 மில்லிக்கிராம் வரையிலான ஜஸ் போதை பொருட்களுடன் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 5 பேரும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது தொடக்கம் 50 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

இவர்களை நீதிமன்ற அனுமதியை பெற்று 72 மணித்தியாலயம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும், விசாரணையின் பின்னர் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.