காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி கர்பலா பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வவுனியாவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.