
காத்தான்குடியில் இடம்பெற்ற “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” கௌரவிப்பு நிகழ்வு
எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி அல்-மனாா் அறிவியல் கல்லூரியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளா் ஜே.எல்.எம்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்புத் தரப்பைச்சோ்ந்த உயரதிகாரிகளும் தேசத்திற்காய் பங்காற்றியவா்களும் கௌரவமளிக்கப்பட்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியா் றமீஸ் அப்துல்லாஹ், கலை, கலாசாரபீட பீடாதிபதி பேராசிரியா் எம்.எம்.பாஸில், பேராசிரியர் கலாநிதி இஸ்மாயில், சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஏ.ஏ.எம்.நுபைல், ஏ.எம்.றியாஸ் அஹமட், மட்டக்களப்பு வா்த்தகா் சங்கத்தலைவா் கே.எம்.கலீல், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளா் மர்சூக் அகமட் லெவ்வை உட்பட புத்திஜீவிகள், ஊர்ப்பிரமுகா்கள், ஊடகவியலாளா் எனப்பலரும் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்வில் பாதுகாப்புத்தரப்பு அதிகாரிகள், தேசத்திற்கு பங்காற்றியவா்கள் என 50 போ் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்,முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்காகவும் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் அவலங்களை செய்திகளாக உடனுக்குடன் கொண்டு செல்வதன் காராணமாக ஊடகத்துறைக்கு ஆற்றிய மற்றும் ஆற்றி வரும் அளப்பரிய சேவைகளைப் பாராட்டி ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் விருது, நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




