
காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் தாயை கத்தியால் குத்திய இளைஞர் கைது
இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் தாயை சரமாரியாக கத்தியால் குத்திய காதலனை பொலிஸார் கைது செய்தனர்.
கொசவன்பேட்டை பகுதியை சேர்ந்த பிஎஸ்சி 3 ஆம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் உடன் படிக்கும் அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த மாணவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவியின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்ட மாணவரிடம் அவரது தாயார் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அவரது கழுத்தில் சரமாரியாக குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமுற்று அலறிய பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
