காதல் ஜோடியை கல்லில் கட்டி ஆற்றில் வீசிய தந்தை!
இந்தியாவில் தந்தை ஒருவர் மகளையும், காதலனையும் சுட்டுப் படுகொலை செய்த பின்னர் கல்லில் கட்டி ஆற்றில் வீசியுள்ளார்.
மத்தியபிரதேசம் மொரினா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி (வயது – 18) என்பவரும், பாலுபுரா கிராமத்தைச் சேர்ந்த ராதேஷ்யாம் (வயது – 21) என்ற வாலிபருமே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்கள் ஒரே சாதியை சேர்ந்த போதிலும் அவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி தொடக்கம் காதல் ஜோடிகள் காணாமல் போயுள்ளனர்.ராதேஷ்யாமின் குடும்பத்தினர் ஷிவானியின் குடும்பத்தினரே கொலை செய்திருப்பார்கள் என்று குற்றம்சாட்டி பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளனர். ஆயினும், காதல் ஜோடி வேறு ஊருக்கு சென்றிருக்கலாம் என்று ஆரம்பத்தில் கூறிய பொலிஸார் வாலிபரின் குடும்பத்தின் வற்புறுத்தலால் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன் போது, ஷிவானியின் தந்தை கடந்த 3 ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டு இருவரையும் படுகொலை செய்தபின்னர் அன்று இரவு தமது குடும்ப பெண்களுடன் சேர்ந்து இருவரினதும் உடல்களுடன் கனமான கற்களை கட்டி, முதலைகள் நிறைந்த சம்பால் ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காதல் ஜோடியின் உடல்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினரையும், நீச்சல் வீரர்களையும் பொலிஸார் ஈடுபடுத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்