காதலி மீது கத்திக்குத்து: காதலன் கைது

புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிர் இழந்துள்ளார்.

வென்னப்புவ பகுதியை சேர்ந்த 20 வயதுடைய காதலியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்த காதலியும் சந்தேக நபரான காதலனும் ஒரு வருடத்திற்கு மேல் காதல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த காதலி சந்தேக நபருடனான காதல் உறவை முறித்து கொள்ள முயன்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த காதலன் சம்பவ தினத்தன்று, காதலியின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறின் போது சந்தேக நபரான காதலன் தனது காதலியை கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய காதலனே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்