
காதலியை கொன்று விட்டு பொலிஸில் சரணடைந்த காதலன்!
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு வலய பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை தானே செய்ததாக கூறி குறித்த யுவதியின் காதலன் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
காதல் விவகாரம் தொடர்பான தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காதலியின் வீட்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வைக்கால பகுதியை சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
