காதலியின் மீது பெற்றோல் குண்டு வீசிய இளைஞன்
ஜெயங்கொண்டத்தில் தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்ட காதலி அருகே பெற்றோல் குண்டு வீசிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நரசிங்க பாளையக் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் வீசிய பெற்றோல் குண்டு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அப் பெண்ணின் அருகே விழுந்து வெடித்த அதேவேளை அங்கு வந்த பேருந்தின் சாரதி, சுதாகரித்துக் கொண்டு பேருந்தை நிறுத்தியதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்