காதலிக்கு பிறந்தநாள் சப்ரைஸ்: கார் திருடிய காதலன்

அவிசாவளை தித்தெனிய பிரதேசத்தில் ரூபா 68 லட்சம் பெறுமதியான கார் மற்றும் 11,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடியதாக புத்தல பொலிஸ் நிலையத்தில் ஜுலை 8 ஆம் திகதி வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய 9 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல, பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஓட்டுநர் சோதனைக்காக காரின் உரிமையாளருடன் சென்றுள்ளார். அங்கு, காரில் ஏதோ சத்தம் கேட்டதாகவும், காரில் இருந்து இறங்கி, சத்தம் கேட்ட இடத்தை சோதனை செய்யுமாறு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.உரிமையாளர் சோதனையிட்ட போது சந்தேகநபர் காரை ஓட்டிக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை சப்ரைஸ் செய்வதற்காக காரை திருடியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஹங்வெல்ல மற்றும் புத்தல பொலிஸ் நிலையங்கள் இணைந்து குறித்த திருட்டு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்