காதலிக்கும் போது செலவு செய்த பணத்தில் பாதியை திருப்பி தர வேண்டும்: முன்னால் காதலன்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் முன்னாள் காதலியிடம் செலவு செய்த பணத்தில் பாதியை திருப்பித் தருமாறு கேட்டுள்ளது தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது .
அடிலெய்ட் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர், அய்லே என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
தன் காதலன் விதித்த நிபந்தனை குறித்து டிக்டாக்கில் அய்லே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் அனுப்பியிருந்த நீண்ட பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். வாகனத்திற்கான எரிபொருள் செலவு, உணவு, தண்ணீர் செலவு மற்றும் சினிமா டிக்கெட் என ஒன்றுவிடாமல் அதில் அலெக்ஸ் பட்டியலிட்டுள்ளார்.
முன்னதாக காதலில் இருந்தபோது, அய்லே தன் பணத்தை எடுத்து செலவு செய்ய ஒருபோதும் அலெக்ஸ் அனுமதித்தது கிடையாதாம். காதலியின் மீது இருந்த பிரியத்தால் ஒவ்வொரு முறையும் அவரே பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார்.
ஆனால், ஒவ்வொரு முறையும் செய்த செலவுகளை உடனுக்குடன் குறிப்பெடுத்து வைப்பதை வழமையாக கொண்டிருக்கிறார்.
ஆனால், காதலில் பிரிவு ஏற்பட்ட நிலையில் செய்த செலவுகள் அனைத்தையும் பட்டியலிட்டு, பாதி பணத்தை அனுப்பி வைக்குமாறு அலெக்ஸ் கெடு விதித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்