காதலன் கார் வாங்க தந்தையின் பணத்தை திருடிய காதலி : ஏமாற்றிவிட்டு சென்ற காதலன்!

இந்தியா – சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் தனது காதலனுக்கு கார் வாங்குவதற்காக வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி தனது காதலனின் விருப்பத்திற்கு இணங்க, கார் வாங்குவதற்காக வீட்டில் இருந்து 20 இலட்சத்தை திருடி காதலனிடம் கொடுத்துள்ளார்.

காதலன் அந்தப் பணத்தில் கார் ஒன்றை வாங்கி செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த காதலன் காதலியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார், இதனை தொடர்ந்து அவர் குறித்த பெண்ணை ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி, சம்பவம் தொடர்பில் தனது தந்தைக்கு தெரிவித்ததை அடுத்து காதலன் மீது பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.