காணி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணிக்கு நிபந்தனைகளுடன் பிணை!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் முறைகேடான விதத்தில் காணியை எழுதிய குற்றச்சாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சட்டத்தரணி விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரது கடவுச் சீட்டு முடக்கப்பட்டதுடன் வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.

மேலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட் பிணைகளுடன் குறித்த சட்டத்தரணி விடுவிக்கப்பட்டார்.