காணி அமைச்சின் பெயரை பயன்படுத்தி பாரிய நிதி மோசடி

காணி அமைச்சின் விபரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குழு ஒன்று அமைச்சின் போலி இலச்சினைகளை பதித்த வாகனங்களில் அமைச்சின் அதிகாரிகள் போன்று வேடமணிந்து இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரிதிகம பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு காணி அமைச்சு காணிகளை வழங்குவதாகக் கூறி குறித்த குழுவினர் பொதுமக்களிடம் பணம் சேகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து, காணி அமைச்சு மோசடியாளர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறான மோசடி நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.