காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6800 லீற்றர் டீசல் பறிமுதல் : ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சியில் பெருந்தொகையான டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, கிளிநொச்சி கரடிப் போக்குச் சந்திக்கு அண்மித்த பகுதியில் தனியார் காணியொன்றில் மறைத்து வைப்பட்டிருந்த நிலையில் 6800 லீற்றர் டீசலும், 200 லீற்றர் பெற்றோலும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன்போது சந்தேக நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.