காணியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் நேற்று திங்கட் கிழமை பிற்பகல் சந்தேகத்திற்கிடமான முறையில் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.