
காணாமல் போன 3 மாணவர்கள்: கண்டால் தகவல் தரவும்
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் நேற்று வியாழக்கிழமை முதல் 3 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.
நடராஜா நிலூக்ஷன் (வயது – 15), யோகராஜன் திவாகர் (வயது -13), ராஜா சன்தூர் (வயது -14) ஆகிய சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் மூவரும் நீர் குழாய் ஒன்றை உடைத்து விட்டதால் வீட்டார் திட்டுவார்கள் என்ற பீதியில் பாடசாலை செல்வதாக கூறி நேற்று வீட்டை விட்டு வெளியேறிச் சென்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவர்களை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு பொலிஸார் மற்றும் பெற்றோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
