காணாமல் போன பாடசாலை மாணவனை தேடித் தருமாறு கோரிக்கை

-திருகோணமலை நிருபர்-

கஹடகஸ்திகிலிய-ஹெட்டுவெவ மஹபொத்தான பகுதியைச் சேர்ந்த ரஹ்மான் ஆதிப் என்ற பாடசாலை மாணவன் காணாமல் போய் உள்ளார்.

குருநாகல்-கெகுனுகொல்ல தேசிய பாடசாலை விடுதியில் தங்கி இருந்த போது கொழும்பு நோக்கி சென்றுள்ளதாகவும், நேற்று 16ம் திகதி வாழைத்தோட்டம், புதுக்கடை பகுதியில் நடமாடி திரிந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

குறித்த மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது கீழே தரப்பட்டுள்ள  இலக்கங்களுக்கோ தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

0771190530
0718227451
0770883842
0775020282