காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் பலி!

மங்களகம கனுவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கனுவையில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான டி.எம்.இந்திரவதி (வயது – 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது தோட்டத்தில் முந்திரி சேகரிக்கச் சென்ற போது அங்கு காட்டு யானை இருப்பதை அறிந்ததும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய போதும் யானை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.