காட்டு யானைகளின் அட்டகாசம்

-மூதூர் நிருபர்-

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் உள்ள கல்மெட்டியாவ கிராமத்திற்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு  நுழைந்த காட்டு யானைகள் வயல் நிலங்களுக்கு சேதம் விளைவித்துள்ளன.

இவ்வாறு நுழைந்த யானைகள் மூன்று ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்களை உண்டும், மிதித்தும் நாசம் செய்துள்ளன.

அரசாங்கத்தினால் இடப்பட்ட மின்வேலி காணப்படுகின்ற போதிலும் அது செயற்படும் நிலையில் இல்லை எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் அனைத்து அரச அதிகாரிகளிடமும் தெரிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்