காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலி
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டில் பகுதியில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முத்துவிநாயகபுரம் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாகக் குறித்த பகுதியில் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் விவசாயிகளும் பொது மக்களும் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
