காட்டுத் தீயில் 37 பேர் பலி, 161 பேர் படுகாயம்

கிழக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 161 பேர் காயமடைந்துள்ளனர், என வட ஆப்பிரிக்க நாட்டின் சிவில் பாதுகாப்புத் துறை நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

வடக்கு அல்ஜீரியா-துனிசிய எல்லைக்கு அருகில் உள்ள எல் டார்ஃப் பகுதியில் உள்ள விலாயா பிராந்தியத்தில் 34 பேர் இறந்து கிடந்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து ஒன்றில் எட்டு பேர் மலைப் பிரதேசத்தில் பயணித்தபோது பேருந்து தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் அப்பகுதிகளுக்கு விடுமுறையை கழிக்க வந்தவர்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க அல்ஜீரிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.