
காட்டுக்கு தீ வைத்தவரை கையும் களவுமாக பிடித்த பொலிஸார்
-பதுளை நிருபர்-
காட்டுக்கு தீ வைத்த நபரொருவரை பொலிஸார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் காட்டுபகுதிகளில் தீப்பிடித்து வருகின்றது.
இந்நிலையில் பல்லேகட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவில கீழ்பிரிவில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்பவர்களை பிடிப்பதற்காக பொலிஸார் மறைந்திருந்த வேளை நபரொருவர் காட்டிற்கு தீ வைக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
லயன் இலக்கம் 3 கீழ்ப்பிரிவு நாவில தோட்டம் தெமோதரயை சேர்ந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது நீதவான் அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
