காட்டில் 3 நாட்களாக நிர்வாணமாக அலைந்த பெண்
கம்பளை பிரதேசத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்புலுவாவ சரணாலயத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக அவ்வப்போது பெண் ஒருவர் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள் குழு, குறித்த வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
குறித்த வனப்பகுதிக்குள் ஒரு பெண் உடலில் ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவ்விடத்திற்கு வந்த கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழு அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்