Last updated on April 11th, 2023 at 07:58 pm

காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான QR ஒதுக்கீடுகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுடன் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் கையிருப்பை குறைந்தபட்சம் 50 சதவீதம் பேண வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து எரிபொருள் தாங்கி ஊர்திகளுக்கும்  ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி பொருத்தப்படும் என்றும், அதன்பிறகு அனைத்து தனியார் தாங்கி ஊர்திகளுக்கு  இந்த கண்காணிப்பு முறை செயல்படுத்தப்படும், என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்